சாண்டி புயலின் தாக்கத்தில் இருந்து மெல்ல மீண்டு வரும் அமெரிக்காவை ஏதெனா (Athena) என்ற மற்றொரு புயல் தாக்க தொடங்கியுள்ளது.
நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஏதெனா (Athena) புயல் காரணமாக ஆயிரத்து 700 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
மணிக்கு 60 மைல் வேகத்தில் புயல் காற்று வீசும் என அறிவித்துள்ள வானிலை மையம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சாண்டி புயலினால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணி, Athena புயலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.