
வணிக கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவையா, அதில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பன உள்ளிட்ட பல விஷயங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டிய பொறுப்பு கடல்சார் வாணிபத்துறைக்கு உள்ளது.
எம்எம்டி எனப்படும் இந்த கடல்சார் வாணிபத்துறை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
கப்பல் கடல் பயணம் மேற்கொள்ளத் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுள்ளதா என்பதையும் பரிசோதிக்க வேண்டிய பொறுப்பு கடல்சார் வாணிபத்துறைக்கு உள்ளது.
கப்பல் பதிவு செய்யப்பட்டது, அதன் எடை தாங்கும் திறன்,பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை இந்த துறை உறுதி செய்ய வேண்டும்.
கப்பலில் உள்ள இயந்திரங்களின் செயல்திறனை ஆய்வு செய்து சான்றிதழ் அளிப்பதும் கடல்சார் வாணிபத்துறையே. ஆனால் பிரதிபா காவேரி கப்பலை கடல்சார் வாணிபத்துறை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
வணிக கப்பல்களின் இயக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இத்துறை அந்த பொறுப்பை முறைப்படி செய்ய வில்லை என்றும் இதுவே 6 பேரின் உயிர்கள் பறிபோக முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.