பிகார் மாநிலம் பாட்னாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பிகார் மாநிலத்திற்கு சிறப்பு கவனிப்பு வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிகார் மாநிலத்திற்கு சிறப்பு கவனிப்பு கொடுக்கும் விடயத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது எனவும் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் இன்றைய சூழ்நிலையில் பிகார் மாநிலம் மற்ற மாநிலங்களைப் போல் வளர்ச்சியடைய 20 ஆண்டுகள் ஆகும் எனவும் சிறப்பு கவனிப்பு கிடைக்கும் வரை தான் ஓயப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.