கோப்புப் படம்: இந்திய கவுன்சிலர் உடனான சந்திப்பின்போது முரளி ரகுநாதன் (வலது). |
இலங்கை பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக ராஜபக்சேவின் ஆளும் கட்சியினர் குற்றவியல் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.
இந்நிலையில், "பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான தீர்மானத்தில் பாராளுமன்றத் தமிழ் பேசும் தலைமைகள் கையெழுத்து போடுமேயானால் அது தனக்கு தானே வைத்துக்கொள்ளும் பொறி" என ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
அற்ப சொற்ப சலுகைகளுக்காக சிறுபான்மை தமிழ் பேசும் உரிமைகளை இல்லா தொழிப்பதற்காக இந்த அரசுடன் துணைபோகும் தமிழ் பேசும் தலைமைகள் தனக்கு தானே பொறிவைக்கும் இந்த அரசின் சூழ்ச்சிக்கு பொதுமக்கள் இரையாகக்கூடாது என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான இந்த அரசின் அடாவடித்தனம் தமிழ் பேசம் மக்கள் மீது வலுகட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளதை அகில உலகமே பார்த்துக்கொண்டிருக்கின்றதை யாவரும் அறிந்ததே. மாறாக தமிழ் பேசும் தலைமைகள் பாராளுமன்றத்தில் பிரதம நீதியரசரக்கு ஆதரவாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். இதுதான் தமிழ் பேசும் தலைமைகள், உரிமைகளை நசுக்குகின்ற இந்த அரசுக்கு போதிக்கின்ற பாடமாக அமையும் எனவும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரை 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்து இட்டுள்ளார்கள் எனத் தெரிகிறது.
இந்நிலையில், "இலங்கை போன்ற நாடுகளில் நீதிமன்றக் கட்டமைபின் ஊடாகக் கூட எதையும் சாதிக்க முடியாது என்பதை சிங்கள மக்களும் உணரும் நிலை உருவாகிறது.
மகிந்த பாசிசம் தனது கொல்லைப்புறத்திலேயே குற்றங்களையும் சுமத்தி தீர்ப்பையும் எழுதுகிறது. எனது போராட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக முற்போக்கு சக்திகளின் குரல் அவசியமானது" என முன்னதாக நீதியரசர் தெரிவித்திருந்தார்.