அந்நிய நேரடி முதலீட்டால் மக்களுக்கு பயனுள்ளது: வணிகர்களுக்கு? |
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு, நாட்டின் சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டால் ஏற்படும் விளைவுகள் போன்றவை குறித்து விளக்குவதற்காக தில்லியில் காங்கிரஸ் கட்சி இன்று பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் பேரணியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் வளர்ச்சிக்காகவே பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சமுதாயத்தில் அனைவரும் அனைத்தும் பெற வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு எனும் அரசின் கொள்கையால், சாதாரண மக்களுக்கு பெரும் பலன் கிடைக்கும் என்றும் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.