Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போர்க்குற்றம்சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவை பிரதி தூதுவராக ஏற்குமா தென்னாபிரிக்கா?

இலங்கையில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் தென்னாபிரிக்கா, போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவரைத் பிரதித் தூதுவராக ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை நியமிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்கு வகித்தவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. 

இந்தப் போரில் பொதுமக்களின் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், மற்றும் சரணடைந்த போராளிகள், பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு இவர் நேரடியாகப் பொறுப்பாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. 

இவர் ஐ.நாவுக்கான பிரதித்தூதுவராக நியமிக்கப்பட்ட போதும், ஐ.நா அமைதிகாக்கும் படையின் முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்ட போதும் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. 

அதேவேளை, தென்னாபிரிக்க அரசாங்கம், போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு நம்பகமான விசாரணைகளின் மூலம் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. 

அத்துடன் தென்னாபிரிக்காவின் முன்னாள் நீதிபதியும் தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளையும் அதே கருத்தையே வலியுறுத்தி வருகிறார். 

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஜஸ்மின் சூகாவும் இந்தக் கருத்தையே வலியுறுத்தி வருகிறார். 

இந்தநிலையில், போர்க்குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை தென்னாபிரிக்க அரசாங்கம் இலங்கையின் பிரதித் தூதுவராக ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனிக்கான பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டபோது, கடும் எதிர்ப்புகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post