Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தென்னாபிரிக்காவுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்ட கோத்தா

இலங்கை பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தென்னாபிரிக்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக லங்கா நியூஸ்வெப் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது அவர் தென்னாபிரிக்க அரசின் மூத்த அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 

இந்தப் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது மற்றும் அதன் நோக்கம் குறித்து இந்தியாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோத்தாபய ராஜபக்சவின் இந்தப் பயணத்தை அடுத்து, இலங்கை அரசின் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, நியோமல் பெரேரா, விநாயகமூர்த்தி முரளிதரன், பைசர் முஸ்தபா, ஜனக பண்டார ஆகியோரைக் கொண்ட குழு கடந்த ஒக்ரோபார் 27ம் நாள் ஒரு வாரகாலப் பயணமாக தென்னாபிரிக்கா சென்றதாகவும் லங்கா நியூஸ் வெப் தகவல் வெளியிட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post