Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்க தேர்தல் - மீண்டும் வெள்ளை மாளிகையில் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் 303 தேர்வாளர்கள் வாக்குகள் பெற்று மீண்டும் அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னிக்கு 206 வாக்குகளும் கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 538 வாக்குகளில் அமெரிக்க அதிபராக 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறவேண்டும். 

மேலும் தொடர்ந்து 2வது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஒபாமா டிவிட்டர் மூலம் மக்களுக்கு நன்றிகளை பதிவு செய்துள்ளார்.இந்த வெற்றியை ஒபாமாவின் ஆதரவாளர்கள் கொண்டாடிவருகின்றனர்.குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ராம்னியும் ஒபாமாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post