Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி ஊக்கத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு


தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து,மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் தொழிலாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2011-12 ஆம் நிதி ஆண்டிற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 102 தொழிலாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு ஊக்கத்தொகை மற்றும் 11 புள்ளி 67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு உக்கத்தொகை வழங்க ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். 11 ஆயிரத்து 452 பதிலிப் பணியாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு உக்கத்தொகை வழங்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தைச் சேர்ந்த 74 ஆயிரத்து 950 தொழிலாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு உக்கத்தொகை மற்றும் 11 புள்ளி 67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு உக்கத்தொகை தொகை வழங்க ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இதேபோன்று, மின்வாரியத்தில் பணிபுரியும் 9 ஆயிரத்து 350 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உக்கத்தொகை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், தமிழ்நாடு தேயிலை தோட்டம், ரப்பர் தோட்டம், வனத்தோட்ட கழக ஊழியர்களுக்கும் , பாடநூல், டாஸ்மாக் , கூட்டுறவு மற்றும் சர்க்கரை ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு 20 சதவிகித உக்கத்தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post