தீபாவளி நெருங்கி வரும் நிலையில் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் தீபாவளி வர இருக்கும் நிலையில் சென்னையில் வசிக்கும் பலதரப்பட்ட மக்கள் அவர்களின் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.இந்த நிலையில் தொடர்வண்டிகளுக்கான முன்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு மொத்தம் 6000-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அதிக தொலைவு செல்லும் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளத்தை அனுகலாம்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண். 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.