சென்னையில் கடலில் தரை தட்டி நின்ற கப்பலால் சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கறையில் நீலம் புயலின் தாக்கத்தால் பிரதிபா காவிரி என்னும் கப்பல் தரை தட்டி நின்றது.இந்த நிலையில் கப்பலில் இருக்கும் ஃப்ரனஸ் என்ற எரிபொருள் எண்ணேய் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் தரை தட்டிய கப்பலில் கசிவு உள்ளதா என்பது பற்றி சிறப்பு நிபுணர்கள் குழு மூலம் கடலோர காவல்படையினர் ஆய்வு செய்துவருகின்றனர். இந்நிலையில் தரை தட்டிய கப்பலை ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்ல மகாராஷ்ட்ரா மற்றும் ஒடிசாவிலிருந்து இரண்டு இழுவைக் கப்பல்கள் வரவழைக்கப்பட உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.