Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - சுப்பிரமணியன் சாமி

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி அறிவித்துள்ளார். 
காங்கிரஸ் கட்சி நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சுப்பிரமணியன் சாமி புகார் தெரிவித்துள்ளார்.நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் தி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடட் நிறுவனத்திற்கு 90 கோடி ரூபாயை காங்கிரஸ் கட்சி கடனாக கொடுத்ததாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது மேலும் தேசிய விடுதலைக்காக குரல் கொடுத்த அந்த பத்திரிகையை காப்பாற்றவே நிதியுதவி செய்ததாகவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இது நடந்ததாகவும் கூறியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post