ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று மாலை இடம்பெற்ற பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க நிகழ்த்திய உரையில், புதிதாக எதுவும் இல்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சித்துள்ளன.
இவர் தனது உரையில் இலங்கை அரசு மனிதஉரிமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு கொடுத்தது, போரால் இடம்பெயர்தோரை மீள்குடியேற்றியது. வடக்கில் மிதிவெடிகளை அகற்றியது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்றவற்றை மகிந்த சமரசிங்க தனது அரை மணிநேர உரையில் பட்டியலிட்டிருந்தார்.
அத்துடன் இலங்கைக்கு உள்ளேயும் வெளியிலும் உள்ள சில சக்திகள் நாட்டை சீர்குலைக்க முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கடத்தப்பட்டு காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும், சில புள்ளிவிபரங்களை வைத்து அவர் நிராகரித்தார்.
வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணத்திலோ, வன்னியிலோ அவர்கள் மக்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்வதில்லை என்றும் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படையினர் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை இராணுவமே விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பொதுமக்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்புகள், சனல் 4 காணொளி உள்ளிட்ட சுமார் 50 சம்பவங்கள் குறித்து இராணுவ நீதிமன்றம் விசாரிக்கிறது என்றும், இதுவரை இந்த நீதிமன்றம் 30 முறைக்கு மேல் கூடி பலரையும் விசாரித்துள்ளதாகவும் மகிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
“இலங்கை இராணுவம் பொதுமக்களுக்குப் இழப்பை ஏற்படுத்தியதா, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதா, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா போன்றன குறித்தும், சனல் 4 காணொளி உண்மையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, அதில் காணப்படுவோரை அடையாளம் காண முடியுமா என்பது குறித்தும் இநத நீதிமன்றம் விசாரிக்கும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தமக்குப் பொருந்தக் கூடிய விடயங்கள் என்ன என்பதை ஆராய்ந்து அதை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை உருவாக்கவும் ஒரு குழுவை இலங்கை இராணுவம் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையும் இதே போன்று செய்துள்ளது. இது முன்னேற்றமில்லை என்றால் எது முன்னேற்றம் என்று நான் கேட்கிறேன்". என்று மகிந்த சமரசிங்க சமரசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.