ஆந்திர பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எர்ரன் நாயுடு ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலியானார்.
அவருக்கு வயது 55. அவர் பயணம் செய்த கார் ராணாஸ்தலம் பகுதியில் வந்தபோது காலை 2 மணியளவில் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.