ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமா உலகிற்கு ஆற்றிய பெரும் பணிக்காகவும்,அவருடைய திறைமையான நடிப்பிற்காகவும்,பிரான்ஸ் அரசு தங்கள் உயரிய விருது ஒன்றை நேற்றைய தினம் நடைபெற்ற விழாவில் அவருக்கு வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்க்கு இவ்விருது இரட்டிப்பு சந்தோசத்தை அளித்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்த இவர்,இவ்வாறான ஒரு விருதை தனக்கு அளித்த பிரான்ஸ் அரசுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும், இவ்வுயரிய விருது தனக்கு கிடைப்பதற்கு பக்கபலமாக இருந்த தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் தன்னுடைய நன்றியை இவ்வேளையில் தெரிவிப்பதாகவும் கூறினார்..
நேற்றைய தினம் ரிட்சி ஹோட்டலில் நடைபெற்ற விழாவில், இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் பிரான்கோயிஸ் ரிச்சியர் இவ்வுயரிய விருதை ஐஸ்வர்யாவிற்கு வழங்கினார்.இந்நிகழ்வில் ஜெயா பச்சன் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை ஐஸ்வர்யாவிற்கு தெரிவித்துக் கொண்டார்.
ஏற்கனவே இவ்வியரிய விருது ஷாருக்கான் மற்றும் நந்திதா தாஸ் போற்றவர்களுக்கு கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.