வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்,
“இலங்கையின் நீதித்துறை மீதான தலையீடுகள் தொடர்பாக நாம் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளோம்.
இலங்கையில் கடந்தமாதம் நீதிபதி ஒருவர் தாக்கப்பட்டது. அரசாங்கத்தை விமர்சிக்கும் நிதித்துறையினர் அச்சுறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் கவலையளிக்கிறது.
நீதித்துறை சுதந்திரத்தை தடுக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்.
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக அரசாட்சி,பொறுப்புக்கூறல், நல்லிணக்க நடவடிக்கைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கையிடம் உலகின் ஏனைய பங்காளர்களுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.