ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல்கொல்லு நகரில் புகழ் பெற்ற 200 வருட பாரம்பரியம் உள்ள கேஷிரா ராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் இன்று காலை 35 அடி உயரமுள்ள அந்த கோயிலின் கொடி மரம் சரிந்து விழுந்தது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 35 அடி உயரத்தில் மரத்தினால் செய்யப்பட்டு பித்தளை தகடு பொருத்தப்பட்ட கோயிலின் கொடி மரம் கீழே விழுந்து விட்டது.
இந்த நேரத்தில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லாததால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கோயிலின் அர்ச்சகர்கள் கூறினார்கள்.