மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் மதிப்பு 161 புள்ளிகள் உயர்ந்து 18,722 புள்ளிகளாக காணப்படுகிறது.
தேசிய பங்கு சந்தையின் நிப்டி குறியீட்டில் 44.85 புள்ளிகள் உயர்ந்து 5,689 புள்ளிகளாக காணப்படுகிறது.
ஆசிய பகுதியில் காணப்படும் நிலையான வர்த்தகத்தை தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர்கள் சில்லரை வணிகத்தில் அதிகம் ஈடுபட்டு வருவதனாலும் பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி உள்ளது.