யாழ்ப்பாணத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு தொற்றாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து நேற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அராலி ஊரத்திப் பகுதியைச் சேர்ந்த ஞனசேகரம் இராஜகோபால் (வயது 20) என்னும் இளைஞரே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் ஆவர்.டெங்கு காய்ச்சல் காரணமாக குறித்த இளைஞர் கடந்த 3 நாட்களாக யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிளந்துள்ளார். யாழில் டெங்குச் காய்ச்சல் தீவிரமடைந்ததை அடுத்து நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்கள் அதிகரித்துச் செல்லுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.