Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு புதிய மனு தாக்கல்

சம்பா சாகுபடிக்குத் தேவையான 50 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் படி, போதுமான நீரை, கர்நாடகம் திறந்து விடவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.

மேலும், நீலம் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்துள்ளதாகவும், சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள இதர உள் மாவட்டங்களில் மழை போதிய அளவு பெய்யவில்லை என்றும் தமிழகம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பெய்த மழையால் மேட்டூர் அணையும் சாகுபடிக்கு போதிய நீர் திறக்கும் அளவிற்கு நிரம்பவில்லை என்றும் தமிழகம் குறிப்பிட்டுள்ளது.

வரும் 15 ந் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழகத்தின் இந்த புதிய மனு குறித்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post