Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யாழில் பறந்த புலிக்கொடி தொடர்பில் தகவல் அறியமுடியவில்லையாம்-காவல்துறை!


தமிழ் கட்சிகளினால் நெல்லியடியில் நடத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது புலிக் கொடி இனம் தெரியாத நபர்களால் காட்டப்பட்டது இதனை யார்காட்டியவர்கள்என்று அறியமுடியவில்லையாம்.
இவ்சம்பவமானது நடைபெற்று பல மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை புலிக் கொடியினைக் காட்டியவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும் யாழ்  காவல்துறை நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் மாநாட்டில் நெல்லியடியில் நடத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது காட்டப்பட்ட புலிக் கொடி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதாக யாழ் மாவட்ட பிரதி காவல்துறை அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை இச்சம்பவத்தில் இரு வாகன இலங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இவை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றத்தால் பணிக்கப்பட்டிருந்தது.இன்நிலையில் இதில் ஒரு இலக்கம் முச்சக்கர வண்டியினுடையது. இன்னொரு இலக்கமான மோட்டார் வண்டியின் இலக்கத்தைச் தேடிச் சென்ற போது உரிய விலாசத்தில் ஒருவரும் இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.இவ்விருவரும் தென்னிலங்கை பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகள் மேலும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த வாகனங்கள் தென்னிலங்கையினைச் சேர்ந்தது என்றால் எவ்வாறு உரிய வாகன அத்தாட்சிப் பத்திரங்கள் இன்றியும் பல்வேறு சோதனைச் சாவடிகளை தாண்டி யாழ்ப்பாணத்தை நோக்கி வந்தன என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post