கப்பல் ஊழியர்கள் தப்ப முயன்றபோது கவிழ்ந்த படகு. பெசன்ட் நகர் கடற்கரையில் அனாதையாக நின்று கொண்டிருந்தது! |
நீலம் புயலால் தரை தட்டிய கப்பலில் இருந்து தப்ப முயன்ற ஊழியர்கள் ஐந்து பேரும் பலியாகிவிட்டனர். ஏற்கனவே நான்கு ஊழியர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 5-வது ஊழியரின் உடலும் கரை ஒதுங்கியது. இந்த உடலும் மீஞ்சூர் பகுதியிலேயே கரை ஒதுங்கியது. அந்த உடலை மீஞ்சூர் போலீசார் மீட்டு பொன்னேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அது ஜோமன் ஜோசப் உடலாக இருக்கலாம் என்று தெரிகிறது. அவரது உடலை உறவினர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.