Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை தலைமை நீதியரசருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள்

இலங்கையின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேணையைக் கொண்டு வந்துள்ளது. 
இலங்கையின் 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, சமர்ப்பித்துள்ள இந்தப் பிரேரணை நேற்று இலங்கை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

தலைமை நீதியரசர் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தெரிவுக்குழு ஒன்றை அமைக்கக் கோரும் வகையில் இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் சொகுசு வீடுகளை வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது, சொத்துக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை, 20க்கும் மேற்பட்ட வங்கி வைப்புகளை வைத்துள்ளார், கணவன் மீதான லஞ்ச, ஊழல் வழக்கு, தகுதியுள்ளோரை புறக்கணித்து மஞ்சுள திலகரட்ணவுக்கு நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலர் பதவியை வழங்கியது, அரசியலமைப்பை மதிக்காமல், சபாநாயகருக்கு அனுப்பும் தீர்ப்பை நாடாளுமன்ற செயலருக்கு அனுப்பியது, பெண் நீதிவான் கமகே பாதுகாப்புக் கோரியதற்காக அவரைத் தண்டிக்க எத்தனித்தது, நீதித்துறையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகார முறைகேடு, தலைமை நீதியரசருக்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டது, நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சீர்குலைத்தது, துர்நடத்தை அல்லது தலைமை நீதியரசருக்கு தகாத விதத்தில் செயற்பட்டது என்பன போன்ற 14 குற்றச்சாட்டுகள் சிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post