ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வில் இலங்கை மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி எலீன் சம்பர்லைன் டோனகே,
“ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இலங்கை அரசு ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத் தான் இன்றும் முன்வைத்துள்ளது.
புதிய யோசனைகளையோ திட்டங்களையோ முன்வைக்கவில்லை.
இலங்கையில் 18வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரங்கள் குவிக்கப்பட்டது குறித்தும், அரசியல் அதிகாரப்பகிர்வு குறித்த இணக்கப்பாடு எதுவும் எட்டப்படாதது குறித்தும் நாம் கவலை கொண்டுள்ளோம்.
முன்பு போர் நடந்த இடங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களின் அன்றாட வாழ்விலும், பொருளாதார விவகாரங்களிலும் இராணுவத் தலையீடுகள் உள்ளன.
2010 தொடக்கம் அரசசார்பற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ளன.
காணாமற்போதல்கள், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற தீவிரமான மனிதஉரிமை மீறல்கள் தொடர்கின்றன.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
எதிர்கட்சிப் பிரமுகர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், தடுத்து வைக்கப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர்.
ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த நம்பகமான விசாரணைகளோ, சட்டநடவடிக்கைகளோ இல்லை.
கடந்த 30 நாட்களுக்குள் நீதித்துறைச் சுதந்திரத்தில் அரசியல் தலையீட்டுக்கு எதிராக கேள்வி எழுப்பிய நீதிபதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
மாகாணசபைகளின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் சட்டமூலத்துக்கு சவால் விடுத்த அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் கொழும்பில் தாக்கப்பட்டுள்ளார். எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்தக் கவலைகளையெல்லாம் கருத்தில் கொண்டு அமெரிக்கா சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.
1.பொதுமக்களின் நிகழ்வுகளில் இருந்து இலங்கை படையினரை வெளியேற்றுதல், காணாமற்போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் குறித்து பதிலளிப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல், மரணச்சான்றிதழ் வழங்கல், காணி சீர்திருத்தம், அதிகாரப்பகிர்வு, ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்குதல் உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2.அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும், மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.
3.மனிதஉரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, வெளிப்படைத்தன்மையானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளின் மூலம் பொறுப்புக்கூற வேண்டும்.
4. தலைமை நீதியரசரை பதவிநீக்கம் செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதாக இன்று செய்திகள் வந்துள்ள நிலையில், இலங்கை அரசு நீதித்துறையில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்." என்று தெரிவித்தார்.