Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கசாபின் மரணத்துக்கு பதிலடியாக இந்தியாவை விரைவில் தாக்குவோம்: தாலிபான்கள் மிரட்டல்!

பதிலடி கொடுப்போம்: தலிபான்கள் மிரட்டல்!
அஜ்மல் கசாப் மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு ப‌ழி‌க்கு பழியாக ஹைதராபாத், அமிர்தசரசில் விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மும்பை தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 160 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே குற்றம் நிரூபிக்கப்பட்ட தலிபான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு கடந்த 21ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு பழிவாங்குவோம் என்று தலிபான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த அமைப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அகமது மார்வத் என்ற தீவிரவாதி, பத்திரிகைக்கு போனில் அளித்த பேட்டியில், கசாப் மரணத்துக்கு நாங்கள் இந்திய மண்ணில் பழி வாங்குவோம். கசாப்பின் மரணம் வீண்போகாது. எங்கள் இயக்கத்தில் அவரை போல மேலும் பலர் உள்ளனர். அவர்கள் ஹைதராபாத், அமிர்தசரசில் உள்ளனர். அவர்கள் விரைவில் தாக்குதல் நடத்துவார்கள் என அகமது மார்வத் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post