Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே உடல் நிலை மேலும் மோசமடைந்தது!

Bal Thackeray health had deteriorated further, the sources said.
சிவசேனா காட்சியின் தலைவர் பால் தாக்கரே, கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் பரவின. வயது மூப்பின் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த தசாரா விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், எனது உடல் நிலை சரியில்லை என்பதனை எனது தொண்டர்களுக்கு தெரிவித்துவிட்டேன். எனது உடல்நிலையை சீராக்க டாக்டர்கள் போராடி வருகின்றனர் என்றார். இந்த நிலையிலும் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சம்னாவில் தொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக செய்தி வெளியிட்டு வந்தார். தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து தனது விமர்சனத்தை சாம்னா பத்திரிகை வாயிலாக கட்டுரையாக எழுதி வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post