Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் கரை ஒதுங்கிய கப்பல்: கப்பலை வெளியே கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் தடை!


செ‌ன்னை‌யி‌ல் தரை தட்டிய 'பிர‌தீபா காவே‌ரி' எ‌ன்ற சர‌க்கு கப்பல் வெளியே செல்வதற்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌ம் தடைவிதித்து‌ள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த நேசிலைச் சேர்ந்த சங்கர நாராயணன்தாக்கல் செய்துள்ள மனுவில், எனது மூத்தசகோதரர் ஆனந்த் மோகன்தாஸ் (32)பொறியாளர். அவர் ‘எம்.டி. பிர‌தீபா காவிரி’ என்ற கச்சா எண்ணெய் சரக்கு கப்பலில் 18.5.12 அன்று 2ம் நிலைஎன்ஜினீயராக பணியில் சேர்ந்தார். அது 4மாதங்களுக்கான ஒப்பந்தப்பணி.37 சிப்பந்திகளுடன் இந்த கப்பல் சென்னைக்குவந்து கச்சா எண்ணெயை சென்னை துறைமுகத்தில் இறக்கியது. கடலில்செல்லும் தகுதி அந்தக் கப்பலுக்கு இல்லை. அதில் போதுமான அளவுஎரிபொருளும் இல்லை. அங்கிருந்த ஊழியர்களுக்கு சம்பளமும்வழங்கப்படவில்லை. தங்களை விடுவிக்கும்படி ஊழியர்கள் கேட்டும் அதன்உரிமையாளர் செவிசாய்க்கவில்லை.

ஆனந்த் மோகன்தாசுக்கும் சம்பளம் தரப்படவில்லை. எனவே கப்பல் உரிமையாளருக்கு அவர் 3 முறை கடிதம் எழுதி, சம்பளம் தரும்படியும்,கப்பலில் இருந்து இறங்க அனுமதியும் கோரியுள்ளார். ஆனால் அதற்கானபதிலை உரிமையாளர் கொடுக்கவில்லை. எண்ணெயை இறக்கிய பிறகுதுறைமுகத்தின் வெளியே கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது.ஊழியர்களுக்கு உணவும், குடிநீரும் கொடுக்கப்படவில்லை. ஒருநாளுக்கு ஒருவேளைதான் உணவு கிடைத்திருக்கிறது. கப்பலில் மருத்துவ சிகிச்சைபெறவும் வசதி இல்லை.

எனவே எனது சகோதரர் மத்திய கப்பல்துறை, தமிழக உள்துறை செயலாளர்,தமிழ்நாடு டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், பட்டினப்பாக்கம்போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை துறைமுக அதிகாரிகள் ஆகியோரைபலமுறை தொடர்புகொண்டு, ஆபத்தான நிலையில் கப்பலில் இருக்கும்எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் யாருமேஅவரது கூக்குரலை கவனிக்கவில்லை.

மத்திய அமை‌ச்ச‌ர் சரத்பவாரின் நெருங்கிய உறவினரின் கப்பல் அதுஎன்பதால் யாருமே எனது சகோதரர் உள்பட மற்ற ஊழியர்களின்கோரிக்கைகளை கவனிக்காமல் விட்டுவிட்டனர். துறைமுகத்துக்கு வெளியே 80 நாட்கள் நிறுத்தப்பட்டு இருந்தாலும்கூட அதிகாரிகள் யாரும் அதுபற்றிவிசாரணை கூட நடத்தவில்லை.

முக்கிய புள்ளியின் கப்பல் என்பதால், கடலில் பயணிக்கும் தகுதியை இழந்திருந்தாலும் 33 நாட்கள் கடலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுஇருந்தது.இந்த நிலையில் சென்னைக்கு புயல் அபாய எச்சரிக்கை வந்துசேர்ந்தது. எனவே ஒவ்வொரு ஊழியரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார்கள். உயிர்காக்கும் படகை உபயோகிக்கமுயன்றாலும், அதற்கு போதிய எரிபொருள் கிடைக்கவில்லை.

அங்கிருந்த 37 ஊழியரில், எனது சகோதரருடன் 22 பேர் உயிர்காக்கும் படகுமூலம் தப்ப முயன்றனர். ஆனால் அதில் போதிய எரிபொருள் இல்லாததால் படகு கவிழ்ந்துவிட்டது. அதைப் பார்த்த மீனவர்கள் சிலர் 15 ஊழியர்களை மீட்டனர். மீதமுள்ள 7 ஊழியர்களில் எனது சகோதரரும் ஒருவர். அவர்கடலில் விழுந்து இறந்துபோனார். மற்ற 6 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. 80 நாட்கள் சரியாக உணவு சாப்பிடாமல், பட்டினியாகஇருந்ததால் படகில் இருந்து விழுந்த சிறிது நேரத்தில் அவரது உயிர்போய்விட்டது. இது முழுக்க முழுக்க கப்பல் உரிமையாளரின் பொறுப்பற்றதன்மையால் நடந்த சம்பவமாகும்.

அதோடு, புயல் வருவதற்கு முன்பு எங்களை காப்பாற்றிவிடுங்கள் என்றுவிடுத்த கோரிக்கையை கேளாமல்போன அரசு அதிகாரிகளாலும் தான் இந்ததுயர சம்பவம் நேரிட்டுள்ளது. உணவு, குடிநீர் போன்றவை கொடுக்கப்பட்டுஇருந்தால் எனது சகோதரன் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டிருப்பார்.ஆனால் நீண்டநாட்கள் உணவின்றி இருந்ததால், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக செய்யும் அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கூட அவருக்கு சக்தி இல்லாமல் போய்விட்டது.

அவரை இழந்து நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சத்தை எங்களுக்கு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கும், கப்பல் உரிமையாளருக்கும் உத்தரவிட வேண்டும். அங்குநடந்த சம்பவம் பற்றி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தஉத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை கப்பலை அங்கிருந்து செல்ல அனுமதிக்கக் கூடாது எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர். 

இ‌ந்த மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் எஸ்.பிரபாகரன்,டி.பி.செந்தில்குமார், பி.எஸ்.அமல்ராஜ் ஆ‌கியோ‌ர் வா‌திடுகை‌யி‌ல், இந்தகப்பலின் ஏஜெண்டுக்கு கப்பல் நிர்வாகம் ரூ.1.5 கோடியை பாக்கிவைத்திருந்தது. எனவே ஏஜெண்டின் உதவிகூட அந்த கப்பல் சிப்பந்திகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது. அங்கிருந்த ஊழியர்கள் மட்டுமல்ல, ஊழியர்களின் உறவினர்கள்கூட அரசு அதிகாரிகள், கப்பல் உரிமையாளர், சென்னை துறைமுகத் தலைவர் உட்பட பலருக்கு உதவி கேட்டு இ-மெயில்அனுப்பினர்.

ஒரு பக்கத்தில் இருந்தும் உதவி கிடைக்கவில்லை.பசிக் கொடுமையால் சிலர் கப்பலில் இருந்த எலி, கரப்பான் பூச்சி போன்றவற்றை சமைத்து உணவாக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. 6 மாதங்களாக வைக்கப்பட்டு இருந்த ரொட்டிகளை சாப்பிட்டுள்ளனர். பட்டினியால் தொய்ந்துபோன அவர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள பலமில்லாமல் போய்விட்டது.

ஏற்கனவே மனுதாரர் சகோதரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,இன்று மற்றொருவரின் உடல் கிடைத்துள்ளது. மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் கப்பலை வெளியேற அனுமதித்தால் இழப்பீட்டை பெற முடியாமல் போய்விடும்.எனவே அதை சென்னையை விட்டு புறப்பட தடை விதிக்க வேண்டும் எ‌ன்றன‌ர்.

இ‌ந்த மனுவை ‌விசார‌ி‌த்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தர‌வி‌ல், இன்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் 6ஊழியர்களின் நிலைபற்றி அறியப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில்வாதிடப்பட்டது. மேலும், கப்பலை வெளியே செல்ல அனுமதித்துவிட்டால், இழப்பீட்டை பெற முடியாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளனர். இந்தவழக்கில் பதிலளிப்பதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்காக சிறப்பு அரசுபிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நோட்டீஸ் பெற்றுக்கொண்டார். மத்தியகப்பல் துறைக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நோட்டீசைமனுதாரரின் வழ‌க்க‌றிஞ‌ர் கொடுக்க வேண்டும்.

கப்பல் உரிமையாளருக்கு தந்தி மூலம் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட வேண்டும்.இவர்கள் 6ஆ‌ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். இந்த நிலையில் பிர‌தீபாகாவிரி கப்பல், சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியே செல்லக்கூடாது என்று தடை ‌வி‌தி‌த்த ‌நீ‌திப‌தி, வழக்கு விசாரணை 7ஆ‌ம் தேதிக்கு தள்ளி‌வைத்தா‌ர்.
[vuukle-powerbar-top]

Recent Post