நவ்று தீவு! |
ஆஸ்திரேலியாவிற்கு அகதியாகச் சென்ற மக்கள் தற்போது நவ்று தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமது தஞ்சக் கோரிக்கையை பரிசீலிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் காலதாமதமாகி வருவதால் நாடு திரும்பி விடுவதே நல்ல முடிவு என்று பலரும் எண்ணுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவ்றூ தீவில் மிகுந்த துயரங்களுக்கு மத்தியிலேயே தாம் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நவ்றூ முகாமிலுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்த அடிப்படையிலேயே நவ்றூ தீவிலிருந்து இலங்கை திரும்புவதற்கு மேலும் 11 பேர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிப்போரை, அங்கிருந்து நவ்றூ மற்றும் பப்புவா நியூகினி ஆகிய நாடுகளுக்கு அனுப்பி, அங்கிருந்து அவர்களின் தஞ்சக்கோரிக்கையை பரிசீலிக்க ஆஸ்திரேலிய அரசு அண்மையில் சட்டம் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.