Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த கோத்ரா மோகன் மந்தன் என்ற அந்த நபரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை நீதிமன்றத்தில் நேற்று நிறுத்தினர். ஒடிசாவில் குரூப் 2 தேர்வு வினாத்தாள் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் ஊழியரான இவர், ஆந்திராவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஆனந்தராவ் மூலமாக வினாத்தாளை விற்றுள்ளார்.

கடந்த வாரம் கைதான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ககனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான கோத்ரா மோகன் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருமே கைதாகி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடந்த குரூப் 2 தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது.

இதில் தொடர்புடைய 24 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இதனிடையே வினாத்தாள் வெளியானதால் ரத்துசெய்யப்பட்ட குரூப் 2 தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்புடன் மீண்டும் நடைபெற்றது.
[vuukle-powerbar-top]

Recent Post