Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் அடக்குமுறை: பெருவாரியான குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிப்பு!

Israel Oppression On Palestine-Depressed Children
கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் மீது நடந்த தாக்குதலில் கடந்த வாரம் மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பெருவாரியான மக்கள் வீடுகளை இழந்து சாலைகளில் உள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள செய்தி, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் நம்பத் தகுந்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது நீடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

[vuukle-powerbar-top]

Recent Post