Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வீட்டின் முன்பு வாலிபர் சிறுநீர் கழிப்பு: தட்டிக் கேட்ட பெண் சுட்டுக்கொலை!

சிறுநீர் கழித்ததில் தகராறு: பெண் சுட்டுக் கொலை!
தெற்கு டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள அல்வி சவுக் பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம். இவரது மனைவி சத்மணி (40). இவர்களுக்கு பின்னோ (17) என்ற மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சத்மணியும், பின்னோவும் வீட்டில் இருந்தனர். இரவு சாப்பிட அமர்ந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜாவத் (26) என்ற வாலிபரும், அவரது நண்பரும் குடிபோதையில் வந்தனர். சத்மணியின் வீட்டு படிக்கட்டில் ஜாவத் சிறுநீர் கழித்தார். அதை கவனித்த சத்மணியும் பின்னோவும், வெளியே வந்து ஜாவத்தை திட்டினர். அங்கிருந்து செல்லும்படி சத்தம் போட்டனர். 

ஜாவத்தும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேச்சு முற்றியது. உடனே விறுவிறுவென அங்கிருந்து சென்றார் ஜாவத். சத்மணியும் பின்னோவும் வீட்டுக்குள் சென்றனர். சில நிமிடங்கள் கழித்து வந்த ஜாவத் வாசலில் நின்று கத்தினார். சத்தம் கேட்டு வெளியே வந்த சத்மணி, பின்னோவை நோக்கி, தான் கொண்டு வந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். உடலில் குண்டுகள் துளைத்ததால் அலறியபடி இருவரும் கீழே சரிந்தனர். உடனே ஜாவத் தப்பிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். 

ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பின்னோ ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். இது அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post