Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பட்டினப்பாக்கத்தில் தரை தட்டி நிற்கும் கப்பல்: கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்படும் அபாயம்!

கச்சா எண்ணெய் கசியும் அபாயம்!
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் தரை தட்டி நிற்கும் கப்பலில் 360 டன் கச்சா எண்ணை இறக்கப்படாமல் உள்ளது. கப்பலின் அடிப்பகுதி மணலில் ஆழமாக புதைந்துள்ளது. தொடர்ந்து காற்று வீசுவதாலும், கடல் அலை காரணமாகவும் கப்பல் ஒரு புறமாக நகர்ந்து சாய்ந்து வருகிறது. இதனால் கப்பலின் அடிப்பாகம் சேதம் அடைந்து கச்சா எண்ணை கசிந்து கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடலோர காவல் படையினரும், சென்னை துறைமுக அதிகாரிகளும் கப்பலை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சிங்கப்பூர் நிபுணர்கள் ஆலோசனையின் பேரில் கப்பலை இழுவை கப்பல்கள் மூலம் நடுக்கடலுக்கு இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மும்பை, பாரதீப் துறைமுகத்தில் இருந்து 2 இழுவை கப்பல்கள் சென்னை வருகிறது.

அந்த கப்பல்கள் தரை தட்டிய கப்பலை இழுக்கும் சக்தி கொண்டது என்றாலும் இதிலும் சிக்கல் உள்ளது. கடலில் எரிபொருள் தீர்ந்து நிற்கும் கப்பலை இழுத்து வந்துவிடலாம். ஆனால் மண்ணில் புதைந்த கப்பலை இழுவை கப்பல்களால் மீட்க முடியுமா? என்ற சிக்கல் உருவாகி உள்ளது.

எனவே முதலில் கப்பலில் உள்ள 360 டன் கச்சா எண்ணையை மற்றொரு கப்பல் மூலம் வெளியேற்ற வேண்டும். அதன் பின்புதான் கப்பலை இழுக்கும் பணி தொடங்கும். இந்நிலையில் கப்பலை, சென்னையை விட்டு எங்கும் எடுத்து செல்லக் கூடாது என்று உயர்நீமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான நமது செய்தியைப் படிக்க தொடருங்கள்:
http://www.newsalai.com/2012/11/Case-filed-against-ship-owner-chennai-high-court-barrier-to-take-ship-out.html
[vuukle-powerbar-top]

Recent Post