Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை கடற்படையினரால் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் கொழும்பு சிறைக்கு மாற்றம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போதை பொருள் கடத்தி இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றதாக இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களான தங்கச்சி மடத்தை சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், லாங்லைட் மற்றும் பிரசாத் ஆகியோரை கொழும்பு உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கொழும்பில் உள்ள வெளிக்கடா சிறைக்கு மாற்றப்பட்டனர்.

அவர்களது முதல் கட்ட விசாரணை இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு வருகிறது. இதை தொடர்ந்து வரும் 20-ம் தேதியும் விசாரணை நடைபெறும் என்று ராமநாதபுரம் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அருளானந்தம் இன்று தொலைபேசி மூலம் நிருபர்களிடம் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post