Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

40 ஆயிரம் மரணங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டும்– மர்சுகி தருஸ்மன்

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட 40 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்று விளக்கமளிக்கப்பட வேண்டும் என்று, இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் தலைவரான- இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமாஅதிபர்- மர்சுகி தருஸ்மன் தெரிவித்துள்ளார். 

“பொறுப்புக்கூறுதல் என்பதன் அர்த்தம் 40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்று விளக்கமளிக்கப்படுவதே. 

அது இன்னமும் நடந்துவிடவில்லை. 

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில், ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான ஆராய நியமிக்கப்பட்டுள்ள சாள்ஸ் பெற்றியின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். 

நானும் நிபுணர் குழுவின் இரு உறுப்பினர்களும் இந்த அறிக்கையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்” என்றும் மர்சுகி தருஸ்மன் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post