கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 16 பேர் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தனர். நேற்று இரவு 10 மணியளவில் மதுரை அவனியாபுரம் அருகே 4 வழிச்சாலையில் பரம்புப்பட்டி விலக்கு அருகே வாகனம் வந்தது.
அப்போது திடீரென நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்தவர்கள் அனைவரும் காயமடைந்தனர். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் காயமடைந்தவர்கள் 108 அவசர ஊர்தி மூலம் மதுரை பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.