
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாது வீட்டின் அருகில் வசித்த சிலர் வானத்தில் வெடிக்கும் வெடியை போட்டு வெடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு வானத்தில் வெடிக்கும் வெடியானது, வாசிங்பட்டறையின் மேல்பகுதியில் இருந்த குடிசையில் விழுந்தது.
இதில் குடிசையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று குடிசையில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.