மானிய விலையில் வழங்கப்படும் சமயல் எரிவாயு கலன்களின் எண்ணிக்கையை ஒன்பதாக உய்ர்த்தி வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டிற்கு 12 எரிவாயு கலன்கள் என்று இருந்ததை இனி 6 எரிவாயு கலன்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் கட்டுப்பாடு கொண்டுவந்தது.இந்த முடிவுக்கு பொது மக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமையல் எரிவாயு கலன்கள் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆலாசனை நடத்தினார்.அப்போது பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று 9 எரிவாயு கலன்களாக உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்த மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.