இலங்கையில் நீலம் புயல் தாக்கியதை தொடர்ந்து, கடற்பகுதியில் வசிக்கும் 70,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த புயலில் 6 பேர் பலியானார்கள்.
கொழும்பில் உள்ள பல சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்துள்ளன. ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை அதிகாரிகள் நேற்று கொழும்பில் நிருபர்களிடம் கூறினார்கள்.
கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தற்காலிக முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கையில் உள்ள பல்வேறு நீர்த்தேக்கங்களிலும், அணைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.