Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் தரைதட்டிய கப்பலில் இருந்து காணாமல் போன 5 மாலுமிகளில் இரண்டு பேரது சடலம் மீட்ப்பு

சென்னையில் தரைதட்டிய கப்பலில் இருந்து காணாமல் போன 5 மாலுமிகளில் இரண்டு பேரது சடலம் இன்று காலையில் கரை ஒதுங்கியது.

சென்னை துறைமுகம் மற்றும் அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மேலும் 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

கடந்த 31ம் தேதியன்று சென்னையில் வீசிய நீலம் புயல் காரணமாக சென்னை துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு வந்த மும்பை தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிரதிபா காவிரி என்ற கப்பல் பெசண்ட் நகர் கடற்கரை ஓரம் ஒதுங்கியது.

கடந்த 8ம் தேதி சென்னைக்கு டீசல் ஆயில் ஏற்றி வந்த இந்த கப்பல், பராமரிப்பு பணிகளுக்காக துறைமுகப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புயலின் தாக்கம் காரணமாக கப்பல் கரையை நோக்கி நகரத் தொடங்கியது. கப்பலில் இருந்த 30க்கும் அதிகமான பணியாளர்கள், அதனைக் கடலுக்குள் செலுத்த முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு கட்டுப்படாமல் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்ட கப்பல், பெசன்ட் நகர் பகுதியில் தரை தட்டியது.

கப்பலில் இருந்த பணியாளர்கள் சிலர் உயிர்காப்பு படகின் மூலம் கரைக்குச் செல்ல முயன்றனர். ஆனால், கடல் சீற்றம் காரணமாக எழுந்த அலைகளில் சிக்கினர். அப்பகுதியில் இருந்த மீனவர்கள், கடலில் குதித்து அவர்களைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், ஒருவர் உயிரிழந்தார். அவரது பெயர் ஆனந்த மோகன்ராஜ் என்றும், அவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

கப்பலில் இருந்த பணியாளர்கள் 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போனவர்களில் எஞ்சியிருக்கும் 3 பேரை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post