Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

39 ஆவது வயதில் கால் பதிக்கும் உலக அழகி.


உலக அழகிகளாக தேர்வு செய்யப்பட்ட இந்திய அழகிகளிலேயே, அப்பட்டத்திற்கு உரிய அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர் ஐஸ்வர்யா ராய்.இன்றும் உலக அழகிகளில் ஒருவராக கருதப்படும் இவருக்கு நேற்றுடன் 39 வயதுகள் கடந்து விட்டது.

மணிரத்தினத்தின் "இருவர்"படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த இவரின் நடிப்பு அபாரமாக பேசப்பட்டதன் பின்னர் இந்தி சினிமாவில் இவர் நடித்த பல படங்கள் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

இந்தி சினி உலகில் காலடி எடுத்து வைத்ததன் பின்னர், தமிழ் படங்களை விடுத்து, இந்திப் படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார் ஐஸ்.இதன் பின்னரே ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு  கிடைத்தது.

அபிஷேக் பச்சன் உடனான திருமணத்தின் பின்னர் இரண்டு தமிழ் படங்களில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா.தற்போது எந்த ஒரு மொழி படத்திலும் அவர் ஒப்பந்தம் ஆகாத நிலையில் அவருக்கான வருகைக்காக காத்திருக்கிறது இந்திய சினிமா உலகம்.

நேற்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்க்கு அலை செய்திகள் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.


[vuukle-powerbar-top]

Recent Post