Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிவகாசியில் பட்டாசுகளை கடத்த முயன்றது தொடர்பாக 3 பேர் கைது

சிவகாசியில் விபத்து நிகழ்ந்த முதலிப்பட்டி பட்டாசு ஆலை தொழிற்சாலையின் கிட்டங்கியில் இருந்து பட்டாசுகளை கடத்த முயன்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதலிப்பட்டி ஓம்சக்தி பட்டாசு ஆலையில் கடந்த செப்டம்பர் மாதம் 5 ம் தேதி நேரிட்ட விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஓம்சக்தி பட்டாசு ஆலையின் கிடங்கில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஒரு லாரியில் ஏற்றப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற காவல்துறையினர், லாரி ஓட்டுனர் பாலமுருகன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஓம்சக்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் முருகேசன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post