பாக்கிஸ்தானில் மட்டைப்பந்தாட்ட போட்டிகள் நடத்துவதில் எந்த பிரச்சனைகளும் இல்லை என உலக லெவன் அணியின் தலைவர் சனத் ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட இலங்கை மட்டப்பந்தாட்ட வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதனால் 2009 -ம் ஆண்டிற்க்கு பிறகு பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக பாக்கிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை.பாக்கிஸ்தான் அணியுடன் மற்ற அணிகள் மோதிய போட்டிகள் அனைத்தும் பொதுவான இடங்களில் நடத்தப்பட்டன.இந்த நிலையில் கராச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சனத் ஜெயசூர்யா பாதுகாப்பு பிரச்சனைகள் பாக்கிஸ்தானில் இல்லை என அறிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் உலக லெவன் அணியும் பாக்கிஸ்தான் ஸ்டார் லெவன் அணியும் போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.