இந்தியாவின் தமிழ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தால் வடமாகாணம் உள்ளிட்ட இலங்கையின் 15 இலட்சம் மக்களுக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதென மக்கள் போராட்ட இயக்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் உரையாற்றிய மக்கள் போராட்ட இயக்கத்தின் அரசியல் விவகார செயலாளர் புபுது ஜயகொட இவ்வாறு அச்சம் வெளியிட்டார்.
அணு மின் நிலையத்தால் பாதிப்பு ஏற்பட்டால் நட்ட ஈடு பெற அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் அணு மின் நிலையம் வெடித்தால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழப்பர் ௭னவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலைய தொழில் நுட்பவியலாளர்கள் மற்றும் அது அமைக்கப்பட்டுள்ள இடம் குறித்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதென அவர் கூறினார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை ௭னவும் அதனால் மக்கள் போராட்ட இயக்கம் இது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் புபுது ஜயகொட குறிப்பிட்டார்.