நான் படத்துக்குப் பிறகு விஜய் ஆன்டனி நடிக்கும் புதிய படம் திருடன் என தலைப்பிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக அறிமுகமான முதல் படம் நான். அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது இந்தப் படம். படத்தை அவரே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்போது அடுத்த புதுப்படத்தைத் தயாரிக்க களமிறங்கிவிட்டார் விஜய் ஆன்டனி.
இந்தப் படத்துக்கு திருடன் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். படத்தின் நாயகி உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, இசையமைப்பாளராக தான் பணியாற்றும் படங்களின் வேலைகளும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்கிறாராம். ஹரிதாஸ், எம்ஜிஆர், சட்டம் ஒரு இருட்டறை போன்ற படங்களின் இசையமைப்புப் பணிகளையும் அவர் வேகவேகமாக முடித்துக் கொடுத்து வருகிறார்.