பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள 15 நாடுகளின் கூட்டம் அவாருவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவுடன் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பை நான் வரவேற்கிறேன் என்று கூறினார். தெற்கு பசிபிக் மாநாட்டின் தீர்மானப்படி, அதன் நிவாரணப் பணிகளுக்கான திட்டங்களுக்காக 32 மில்லியன் டாலரை ஹிலாரி கிளிண்டன் வழங்கினார். பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு வளர்ச்சிக்கு நாம் அனைவரும் முக்கிய பங்காற்றி வருகிறோம். நம் அனைவருக்கும் மிகப்பெரிய பசிபிக் பிராந்தியம் ஒன்றே போதும் என்று நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.