கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் நிரந்தர படைமுகாம் அமைப்பதற்காக 418 ஏக்கர் நிலம் இலங்கை படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளான ஆனைவிழுந்தான் கிருஸ்ணபுரம் கனகாம்பிக்கைக் குளம் இராமநாதபுரம் பரவிப்பாஞ்சான் வட்டக்கச்சி சாந்தாபுரம் பரவிப்பாஞ்சான் பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய 418 ஏக்கர் நிலத்தினை தமக்கு வழங்குமாறு படையினர் கரைச்சி பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படையினரால் கோரப்பட்ட நிலப் பகுதிகள் யாவும் தனியாருடையாதும் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களுடைய நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் இந்த இடங்களில் தற்போதும்
இலங்கைப்படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.
இலங்கைப்படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.
இவர்களால் கோரப்பட்ட நிலப்பகுதிகளில் படையினர் அடையளாப்படுத்தி எல்லையிட்டு வருகின்றனர் இதனால் இப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழர் நிலங்கள் சிங்கள படையினரால் திட்டமிட்ட ரீதியில் அபகரிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை தமிழ் மக்களும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றினைந்து நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் படையினர் மீண்டும் மீண்டும் நிலப்பறிப்புக்களில் ஈடுபட்டு வருகின்ற செயற்பாடானது தமிழ் மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.