காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை கூட்டுவதில் மத்திய அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக, பிரதமர் மன்மோகன் சிங்கி்ற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆணைய கூட்டத்தை கூட்டுவதில் மத்திய அரசு தாமதம் செய்வது ஏன் என்றும், இவ்விவகாரத்தில் பதிலளிக்க வேண்டிய பிரதமர், அமைதியாக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அதிகாரி பதிலளித்து வருகிறார்.
மத்திய அரசு மனு செய்கையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தேதி கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறோம். அவர்களிடமிருந்து பதில் கடிதம் வரவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு குறித்து எங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைக் கண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். காவிரி நதிநீர் பங்கீடு குறித்து விவாதிக்க பிரதமரின் வசதியைப் பொறுத்து நேரத்தை நிர்ணயிப்பதா அல்லது மாநிலங்களின் வசதியைப் பொறுத்து நேரத்தை நிர்ணயிப்பதா என்பது குறித்து எங்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என்றனர்.