Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விசாரணைக்கு கொண்டு செல்வதாக குறுஞ்செய்தி அனுப்பிய இளம்பெண்ணைக் காணவில்லை


வவுனியாவில் இளம்பெண் ஒருவர் காணாமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள, பாவற்குளம் மூன்றாம் படிவத்தில் வசித்து வந்த பத்மநாதன் வசந்தமாலா (வயது-32) என்ற இளம் பெண்ணே காணாமற்போயுள்ளார்.

தனது வீட்டிலிருந்து வவுனியா நகரிலுள்ள மக்கள் வங்கிக்கு கடந்த மாதம் 21ம் நாள் தனது சிறிய தாயாருடன் சென்ற இவர், வங்கிக்கு முன்னால் அவரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர், திரும்பி வரவில்லை.

இந்தநிலையில் காணாமற்போன பெண்ணின் கைத்தொலைபேசி இலக்கத்திலிருந்து, தன்னை விசாரணைக்காக கூட்டிச் செல்வதாக குறுஞ்செய்தி ஒன்று சிறிய தாயாரின் கைத்தொலைபேசிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அன்றிரவு 8.30 மணியளவில் கைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அவர், தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், எங்கேயும் சென்று முறையிட வேண்டாம் என்றும் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர், அவரது கைத்தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இவரது அவரது குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழு, அகதிகளுக்கான ஐ.நா உயர்ஆணையர் பணியகம், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு போன்றவற்றில் முறையிட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post