பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ளவர்களை விடுவிக்கக் கோரிஇலங்கைத் தமிழர் செந்தூரன் கடந்த 6ஆம்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் தற்கொலை முயற்சி வழக்கில் செந்தூரனை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பூந்தமல்லி மாஜிஸ்திரேட்டு முகமது பரூக் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பிறகு செந்தூரனை போலீசார் புழல் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
செந்தூரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, உரிய சிகிச்சையளிக்காமல் அவரை சிறையில்அடைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
செந்தூரன் மயக்கமடைந்து இரண்டு மணி நேரம் ஆன பின்னரும் காவல் துறையினர் அவருக்கு உரிய சிகிச்சையளிக்கவில்லை என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
தற்போது, அவருக்கு ஆதரவாக வைகோவும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.