Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ப. சிதம்பரம் எனது டெலிபோன் பேச்சுகளை ஒட்டு கேட்கிறார்: யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எனது டெலிபோன் பேச்சுகளை ஒட்டுக் கேட்கிறார் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்கா புகார் கூறி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தபோது, நான் அவர்மீது ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறினேன்.

அதுதொடர்பாக அவர் எனது டெலிபோன் பேச்சுகளை ஒட்டுக் கேட்க உத்தரவிட்டிருக்கிறார்.

தற்போது நான் கூறும் புகாருக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று யஷ்வந்த் சின்கா நிருபர்களிடம் கூறினார்.

சிதம்பரத்தைப் பற்றி புகார் கூறியுள்ள யஷ்வந்த் சின்கா, தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் சுசில்குமார் ஷிண்டேவைப் பற்றி கருத்து எதுவும் கூறவில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post